Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துவங்கியது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: வெற்றி நம்பிக்கையில் விஷால் அணி!

துவங்கியது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: வெற்றி நம்பிக்கையில் விஷால் அணி!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (10:33 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் விஷால் அணியினர் உள்ளனர்.


 
 
ஏற்கனவே ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று காலை 8 மணி முதல் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனின் கண்காணிப்பில் சென்னையிலுள்ள அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
 
இந்த தேர்தலில் தாணு அணி, எஸ்.ஏ.சந்திரசேகர் அணி, விஷால் அணி என மூன்று அணிகள் களம் இறங்கியுள்ளன. தலைவர், துணைத்தலைவர் , செயலாளர், பொருளார் உட்பட 27 பதவிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் சுமார் 1500 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் என கூறப்படுகிறது.
 
இதில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலையே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த தேர்தலில் தங்கள் அணி நிச்சயம் வெற்றி பெறும் என விஷால் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments