Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை அரசைக் கண்டித்து, தமிழ்த் திரைக் கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம்

இலங்கை அரசைக் கண்டித்து, தமிழ்த் திரைக் கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம்
, செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (16:38 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி எழுதிய சிங்களக் காடையர் அரசைக் கண்டித்து, தமிழ்த் திரைக் கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடத்த உள்ளனர். சென்னை, தியாகராய நகரில் உள்ள பிட்டி. தியாகராஜர் அரங்கில் 2014 ஆகஸ்டு 07ஆம் தேதி மாலையில், இந்தக் கண்டனக் கூட்டம் நடைபெற உள்ளது.


 
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கை இங்கே:
 
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை, ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவியை, நாட்டு மக்கள் அனைவருமே அம்மா என்று அன்பொழுக அழைக்கும் தகுதி மிக்க தலைவியை சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசின் சார்பில் வெளியாகும் அதிகாரப் பூர்வமான இணையதளத்தில் ஒரு பெண்ணென்றும் பாராமல் அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் இழிவுபடுத்தி எழுதிய சிங்களக் காடையர் அரசைக் கண்டித்து, தமிழ்த் திரைக்கவிஞர்கள் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம்
 
நாள் : 07-08-2014 நேரம்: மாலை 5 மணி
 
இடம் : சர்.பிட்டி.தியாகராஜர் அரங்கம், திநகர், சென்னை.
 
தலைமை  : புலவர் புலமைப்பித்தன்
 
பங்கேற்போர் : இயக்குநர் ஆர்.சி.சக்தி
இயக்குநர் விக்ரமன்
இயக்குநர் புகழேந்தி தங்கராசு
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு
 
கவிஞர்கள்:
 
1. முத்துலிங்கம்,
2. பழனிபாரதி,
3. விவேகா
4. யுகபாரதி
5. கபிலன்
6. இளையகம்பன்
7. அண்ணாமலை
8. நந்தலாலா
9. சொற்கோ
10. இருதயா
11. பிரியன்
12. கலைக்குமார்
13. சிநேகன்
14. பச்சையப்பன்
15. முத்துவிஜயன்
16. பாலமுரளிவர்மா
 
எழுச்சி மிக்க தமிழினப் பெருமக்களே, திரண்டு வருக...
 
கொழும்பு அதிரக் குரல் கொடுப்போம்!
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil