Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயில்கள் நிறுத்தம் எதிரொலி: கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள்..!

Siva
திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:26 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகராட்சி போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தாம்பரம் - கடற்கரை வழியாக செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து பயணிகள் கடும் அவஸ்தை அடைந்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு இந்த ரயில்கள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் செல்லும் பயணிகள் வசதியை கணக்கில் கொண்டு இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகராட்சி போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’பிப்ரவரி 17 முதல் 22ஆம் தேதி வரை தென்னக ரயில்வேயில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மாநகராட்சி போக்குவரத்துக் கழகம் சார்பாக 11.45 மணி முதல் அதிகாலை 4.30 சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments