Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

Mahendran
சனி, 1 மார்ச் 2025 (16:40 IST)
சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பொய்யான தகவல்கள் பரப்பினால், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை தமன்னா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில், கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இந்த நிறுவனத்தில் தமன்னா பங்குதாரராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனை தொடர்ந்து, தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கிடையில், தமன்னா தன் மீதான புகாரை மறுத்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அந்த அறிக்கையில், "கிரிப்டோகரன்சி முறைகேட்டில் எனக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது போன்ற தவறான, பொய்யான தகவல்களை பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என்று எனது மீடியா நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன். மேலும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எனது குழுவினர் எடுத்து வருகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாவர்க்கர் குறித்து பொறுப்பற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

திருமணம் செய்த பெண் ஒருவர்.. முதலிரவுக்கு வந்த பெண் இன்னொருவர்.. மாப்பிள்ளை அதிர்ச்சி..!

வான்வழியை மூடிய பாகிஸ்தான்: பயணிகளுக்கு இண்டிகோ, ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு..!

துணை வேந்தர்களுக்கு நள்ளிரவில் மிரட்டல்.. ஆளுனர் ரவி குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் இருக்கும் 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments