Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தாச்சு சின்னம்மா அடுத்து யார் ஆவா சிஎம் மா? டி.ஆர். பேட்டி!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (13:31 IST)
தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டப்பேரவை தேர்தலில்  மூன்றாவது அணி  உருவாகும் என்று  அண்ணா நினைவிடத்தில் நடிகர்  டி.ராஜேந்தர் சூளுரை. 

 
தமிழக திரைத்துறையில் உள்ளாட்சி வரி 8% குறைக்க வேண்டும், 10 கோடி பட்ஜெட்டி ல் தயாரிக்கும் படங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் டி.ராஜேந்தர் தலைமையில்  தயாரிப்பாளர்கள் உஷா ராஜேந்தர்,  சுபாஷ் சந்திரபோஸ், ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சிங்காரவேலன், பி.டி.செல்வகுமார்ஆகியோர், திரைத்துறையில் இருந்து முதல்வரான மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து வழிபட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து, அண்ணா நினைவிடம் முன்பு டி.ராஜேந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வரிடம் கொடுக்கும் முன் திரைத்துறையை சேரந்த முன்னாள் முமல்வர் நினைவிடங்களில் அவரது ஆன்மாக்களிணம் கோரிக்கை வைத்தோம். 
 
கொரோனா காலக்கட்டத்தில் திரைத்துறையை காப்பாற்ற அண்டை மாநிலங்களில் ஜிஎஸ்டி, உள்ளாட்சி வரியை நீக்கியுள்ளனர். அதுபோல்  தமிழகத்திலும் ரத்து செய்ய கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் கண்ணீரை துடைக்காமல் இருப்பவர்கள் இருக்கலாமா? சிஎம் மா? சிறையில் இருந்து  வந்துவிட்டார் சின்னம்மா அடுத்து யார் ஆவாரகள் சிஎம் மா? சசிகலா  வந்திருப்பதால் சிலருக்கு வந்திருக்கலாம் ஏமாற்றம் பலருக்கு வந்திருக்கும் தடுமாற்றம்.
 
கோடம்பாக்கத்தில் இருந்து வந்தாரா அரிதாரம் பூசினாரா கட்சி தொடங்காமல் கொடி பிடிக்காமல் முதல்வர் ஆனதாலோ என்னமோ திரை துறையின் கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லையோ என்னமோ எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் உருவாகும் மூன்றாவது அணி என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments