எங்கள மாறி சின்ன கட்சிய ஒதுக்குவாங்க.. எதுக்கு வம்பு? – தேர்தலுக்கு வராத டி.ராஜேந்தர் கட்சி!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (14:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் சின்ன சின்ன கட்சிகளும் போட்டியிடும் நிலையில் தனது லட்சிய திமுக கட்சி போட்டியிடாதது குறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத சிறிய கட்சிகளும் ஒரு சில கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் தொடங்கிய லட்சிய திமுக யாருக்கும் ஆதரவு தரவில்லை என அவரே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ள டி.ராஜேந்தர் “தேர்தலில் போட்டியிட்டால் தனித்து நின்று வாக்குசதவீதம் காட்ட வேண்டும். அதற்கு கோடி கணக்கில் செலவு செய்யும் நிலை இல்லை. பெரிய கட்சிகளிடம் நாம் 12 சீட்டு கேட்டால் அவர்கள் கொடுக்க முடியாது. அவர்கள் தரும் சீட்டை நம்மால் ஏற்க முடியாது. எங்களை போன்ற சிறிய கட்சிகளை எல்லாம் எதாவது காரணம் கூறி ஒதுக்குவார்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

17 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது: இப்போது 18வது நாடும் அறிவிப்பு.. டிரம்ப் கடுமையான உத்தரவு..!

முக்கிய அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. பதவி இழப்பாரா?

தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கமா? சென்னையில் மட்டும் 40 லட்சமா?

அடுத்த கட்டுரையில்
Show comments