எந்த சூரியனுக்கான காரிய நமஸ்காரம்: பன்னீர் செல்வத்தை தனது பாணியில் வெச்சு செய்யும் டிஆர்!!

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (12:58 IST)
ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் காலம் கடந்து நீதி விசாரணை கேட்பதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளார். 


 
 
ஜெயலலிதா மரணம் பற்றி இப்போது வாய் திறக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இத்தனை நாட்கள் மவுனம் காப்பது ஏன் என்று கேட்டுள்ளார். 
 
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அமைதியாக இருந்தது ஏன்? இப்போது திடீர் என்று மவுனம் கலைந்தது ஏன்?
 
பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நீதி விசாரணை ஏன் கேட்கவில்லை. காலம் கடந்து பன்னீர்செல்வம் நீதிவிசாரணை கேட்பது ஏன்? காலம் கடந்து ஞானம் வந்து விட்டதா என்றும் கேட்டுள்ளார்.
 
இப்போது ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்பது தும்பை விட்டு வாலை பிடிப்பது போல உள்ளது என்றும், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார் ஓ.பன்னீர் செல்வம், இது எந்த சூரியனுக்கான காரிய நமஸ்காரம் என்றும் கேட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments