பன்றிக் காய்ச்சலுக்கு காவல் படை ஊழியர் பலி
பன்றிக் காய்ச்சலுக்கு காவல் படை ஊழியர் பலி
மதுரையில், கடலோர காவல் படை ஊழியர் பன்றிக்காயச்சலுக்கு பலியானார்.
கடந்த சில நாட்களாக, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (39). ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள கடலோர காவல் படையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால், போதிய சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.