Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்விக்கி டெலிவரி பாயோடு வாக்குவாதம்…. காவலருக்கு உடைந்த எலும்பு!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:52 IST)
ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்து அது வருவதற்கு தாமதம் ஆனதால் காவலருக்கும் டெலிவரி பாய்க்கும் இடையே கைகலப்பு நடந்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார் ஜார்ஜ் பீட்டர். இவர் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு சென்ற பின்னரும் உணவு வரவில்லை. இது சம்மந்தமாக டெலிவரி பாய்க்கு அழைத்துக் கேட்டுள்ளார். அப்போது பேசிய டெலிவரி பாய் ‘குறிப்பிட்ட ஏரியாவுக்கு வந்துவிட்டதாகவும், ஆனால் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிக்கலாக உள்ளதாகவும்’ கூறியுள்ளார். இதனால் போனிலேயே ஜார்ஜ் பீட்டர் கோபமாகி கத்த ஆரம்பித்துள்ளார்.

ஒரு வழியாக அரைமணிநேர தாமதத்துக்குப் பின்னர் டெலிவரி பாய் வந்து உணவைக் கொடுத்துள்ளார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த ஜார்ஜ் உணவை குப்பைத் தொட்டியில் போட்டதாகவும், மேலும் டெலிவரி பாயை தாக்க முயன்றதாகவும் பாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் டெலிவரி பாய் தன்னுடைய ஹெல்மெட்டால் ஜார்ஜின் தாடை மற்றும் கால் பகுதிகளில் தாக்கியுள்ளார்.

இதையடுத்து காவலர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஸ்கேன் செய்த போது எலும்பில் முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. காவலர் அளித்த புகாரின் பேரில் டெலிவரி பாய் கார்த்திக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். கார்த்திக் சொன்ன தகவலின்படி காவலர் குடித்துவிட்டு தன்னை தாக்க முயன்றதால்தான் தான் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளார். போலிஸார் இரு தரப்பு புகார்களையும் எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments