Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி கொலைக்கும் பெங்களூருக்கும் என்ன தொடர்பு? : பகீர் தகவல்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (10:32 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பெங்களூர் மற்றும் மைசுர் ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.


 

 
விசாரணையில், சுவாதி சென்னையில் பணி புரிவதற்கு முன்பு, மைசூரில் பயிற்சிக்காக 6 மாதம் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். சம்பந்தப்பட்ட கொலையாளி அங்கேயும் அவரை பின் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. சுவாதி பணிபுரிந்த அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கொலையாளியை அந்த பகுதியில் அடிக்கடி பார்த்ததாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.
 
எனவே, சுவாதி மைசூரில் 6 மாதங்கள் தங்கி பயிற்சி பெற்ற போது, அவருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்க இரு தனிப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். அங்கு அவரோடு தங்கியிருந்தவர்கள், பணிபுரிந்தவர்களிடம் விசாரணை நடைற்று வருகிறது.
 
மேலும், சுவாதியை கொலை செய்ய கொலையாளி பயன்படுத்திய அரிவாள், கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் பயன்படுத்துவது என்பது தெரிய வந்துள்ளது. எனவே போலீசார் இதுபற்றியும் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments