Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதி சித்தப்பாவின் பாதுகாப்பில் கொலையாளி பாதுகாப்பாக உள்ளான்: அதிர்ச்சி தகவல்

சுவாதி சித்தப்பாவின் பாதுகாப்பில் கொலையாளி பாதுகாப்பாக உள்ளான்: அதிர்ச்சி தகவல்

சுவாதி சித்தப்பாவின் பாதுகாப்பில் கொலையாளி பாதுகாப்பாக உள்ளான்: அதிர்ச்சி தகவல்
, வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (11:42 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் தினமும் பரபரப்பு தகவல்கள் வந்தவாறு உள்ளன. ஃபேஸ்புக்கில் சுவாதியின் கொலை தொடர்பாக தொடர்ந்து பல தகவல்களை வெளியிட்டு வரும் தமிழச்சி என்பவர், தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


 
 
உண்மை குற்றவாளி ராம்குமார் இல்லை எனவும், கொலையாளி முத்துக்குமார் சுவாதியின் சித்தப்பாவின் பாதுகாப்பில் வசதியாக உள்ளான் எனவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே சுவாதியின் தந்தை அவரின் உண்மையான தந்தை இல்லை என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இது குறித்து தமிழச்சி பதிவிட்டுள்ள பதிவு கீழே உள்ளது:
 
சுவாதி படுகொலை செய்யப்பட்ட அன்றைய பரபரப்பான தினத்திலேயே 'சுவாதியை கொன்றது பிலால் என்ற இஸ்லாமிய இளைஞர்' என்று பொது ஊடகங்களில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலரால் ஏற்படுத்தப்பட்ட வதந்தி‬ என்பது போகிற போக்கில் 'உளறுவாயன்கள்' பேசிய பேச்சல்ல.
 
அந்த வதந்திக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து ‎ஓய்ஜிமகேந்திரன்‬ போன்ற பார்ப்பான்கள்‬ பரப்பிய அதிபயங்கர இஸ்லாமிய வெறுப்பு அரசியல்‬ சாதாரணமாக நடந்தவையல்ல. அனைத்தும் திட்டமிட்டே இந்துத்துவ அமைப்பினரால் நடத்தப்பட்டவை.
 
சுவாதி, இஸ்லாமியரான பிலால் என்பவரை காதலிப்பதும் மதமாறும் முயற்சியில் இருப்பதை அறிந்து சந்தான கோபலகிருஷ்ணன் ஆச்சாரமான பார்ப்பனீய குடும்பமான தம்முடைய அக்ரகாரத்திற்குள் ஒரு இஸ்லாமியனை மருமகனாக்க அனுமதிக்க முடியாது" என்று கண்டித்து இருக்கிறார்.
 
ஆனால் சுவாதி பிலாலை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததோடு, குடும்பத்தினருக்கு தெரியாமல் ரிஜீஸ்டர் திருமணத்தையும் செய்துவிட்டார். இதற்கு பிறகே வலுக்கட்டாயமாக பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு சுவாதி வரவழைக்கப்படுகிறார்.
 
அடுத்தகட்டமாக சந்தான கோபலகிருஷ்ணன் இந்துத்துவ அமைப்பினரோடு தீவிரமாக கொலைக்கான திட்டத்தை நடத்துகிறார். பிலாலை கொல்லுவதைவிட சுவாதியை கொல்ல வேண்டும் என்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.
 
சுவாதி தன் மகள் இல்லை என்பதைவிட, தன்னை மதிக்காமல் தன் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்ட சுவாதியை படுகொலை செய்ய உருவாக்கிய திட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்து / இஸ்லாமியர்களிடையே கலவரத்தை தூண்டிவிடவும் பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டுவிட வேண்டும் என்பதுமே சந்தான கோபலகிருஷ்ணன் சார்ந்துள்ள இந்து அமைப்பின் சதி திட்டம்‬. அதன்படியே சுவாதி கொல்லப்பட்ட அன்று பிலால் தான் கொன்றான் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
 
ஒருவேளை பிலால் பிடிபட்டால் சுவாதி இஸ்லாமியனை திருமணம் செய்த மேட்டரெல்லாம் வெளியே வந்துவிடுமோ என்று இன்னொருபுறம் பதற்றம். அப்போதைக்கு யாரையாவது குற்றவாளியாக்கி விடுவோம் என்ற சில அரசியல் புள்ளிகளின் திட்டத்தில் மாட்டியவர் தான் ‎ராம்குமார்.
 
ராம்குமார் கழுத்தை அறுத்தது போலிசுடன் வந்திருந்திருந்த அடியாட்கள் என்பது பொது ஊடகங்களில் மக்கள் நலம் விரும்பிகளால் அம்பலப்படுத்தப்பட்டதும் சுவாதியின் கொலை விசாரணை தடுமாற ஆரம்பித்தது. அவசர அவசரமாக இந்துத்துவ அமைப்பு ராம்குமாரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் சார்ந்த வக்கிலை அனுப்பி அதுவும் பல விதங்களால் முறியடிக்கப்பட்டது.
 
இந்நிலையில் பிலாலிடம் காவல்துறை‬ விசாரணை‬ நடத்தி அவர் என்ன சொன்னார் என்பதை வெளியிட மறுத்தது. தற்போதைக்கு ராம்குமார்தான் குற்றவாளி என்பதை நிரூபித்து விசாரணையை முடித்து இந்துத்துவவாதிகளை காப்பாற்ற சில முக்கிய அரசியல்வாதிகளால் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.
 
சுவாதியை கொலை செய்தவர் பெயர் ‎முத்துக்குமார்‬. தற்போது தஞ்சாவூரில் சுவாதியின் சித்தப்பா பாதுகாப்பில் இருக்கிறார். சுவாதி கொலையில் தொடர்புடையவர்கள் 4 பேர்கள். இவர்களை பாதுகாப்பது சந்தான கோபலகிருஷ்ணனும் அவருடைய தம்பியும். அவர்கள் திட்டங்களுக்கு உடந்தையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர்.
 
இத்தனையும் தவறு. தமிழச்சி என்பவர் எங்களை குறித்து அநாகரிகமாகவும், தவறாகவும், கண்ணியமின்மை இன்றி தொடர்ச்சியாக பொய் குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டிருக்கிறார் என்று என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட ரீதியாக சந்தான கோபலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் புகார்‬ கொடுப்பார்களானால் எனது வழக்கறிஞர் மூலமாக அனைத்து ஆதாரங்களையும் இந்திய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன்.
 
இதற்கு சந்தான கோபலகிருஷ்ணனும் அல்லது அவருடைய தம்பியும் தயாரா? என தமிழச்சி தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். இந்த பதிவை பலர் பகிர்ந்துள்ளனர். இதனால் இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்லின் புதிய திட்டம்