Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை செய்த பின்னர் சுவாதியின் வீட்டருகே பதுங்கிய கொலையாளி!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (09:54 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி சுவாதி என்ற இளம்பெண்ணை படுகொலை செய்த கொலையாளி கொலை செய்த பின்னர் சுவாதியின் வீட்டருக்கே பதுங்கி இருந்தான் என்பது தெரியவந்துள்ளது.


 

 
 
24-ஆம் தேதி காலை 6:30 மணிக்கு சுவாதி மர்ம நபர் ஒருவனால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
கொலை செய்தவன் சுவாதியின் செல்போனை எடுத்து சென்றுள்ளான் என்பது தெரியவந்தது. 24-ஆம் தேதி காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ஆன் செய்தே வைத்திருந்திருக்கிறான்.
 
பின்னர் அந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறான். சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியின் வீடும் சூளைமேட்டில் தான் உள்ளது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போது காட்டிய இடம் சுவாதியின் வீட்டின் அருகில் உள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து சுவாதியை கொலை செய்த அந்த கொலைகாரன் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை காட்டி சூள்ளைமேட்டில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் சோதனை நடத்துகின்றனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments