Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியை கொன்றது மணி?: பெயர் மற்றும் முகவரியை வெளியிட்டார் தமிழச்சி!

சுவாதியை கொன்றது மணி?: பெயர் மற்றும் முகவரியை வெளியிட்டார் தமிழச்சி!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (10:25 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.


 
 
அவர் கைது செய்யப்பட்டதில் இருந்தே பல்வேறு சந்தேகங்களுடனே இந்த வழக்கு நகர்ந்தது. ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை என ராம்குமார் தரப்பும், முகநூலில் தமிழச்சி என்பவரும் கூறி வந்தனர்.
 
பல்வேறு தகவல்களையும், சந்தேகங்களையும் எழுப்பி இந்த கொலை குறித்த சந்தேகங்களை மக்களிடையே முகநூல் வழியே கொண்டு சென்றார் தமிழச்சி. இந்நிலையில் நேற்று திடீரென ராம்குமார் சிறையில் மின் கம்பியை வாயிலும், உடம்பிலும் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் ராம்குமார் கொலை செய்யவில்லை என ஆரம்பம் முதலே கூறி வரும் தமிழச்சி, சுவாதியை கொலை செய்தவன் குறித்த தகவலை வெளியிட்டார். அதில் அவரது பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவை உள்ளன.
 
சுவாதியை கொலை செய்தவர் மணி. இவருடைய அப்பா பெயர் இசக்கி, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். அம்மா மாரி. தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டரில் மணி வேலை செய்கிறார். இவர் கருப்பு முருகானந்தம் கூலிப்படைகளில் ஒருவர். இவருடைய சொந்த ஊர் முத்தூர் (சிவந்திப்பட்டி) நெல்லை மாவட்டம்.
 
சுவாதியை படுகொலை செய்தவர்களில் இவரும் இருந்தார். கொலை நடந்த பின் தன் ஊருக்கு 2 மாதங்களாக செல்லாமல் தலைமறைவாக இருந்த மணி 10 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதுவும் மொட்டை தலையோடு.
 
என்று தமிழச்சி தனது முகநூலில் கூறியுள்ளார். இந்த பதிவு சுவாதியை கொலை வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments