Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி படுகொலை பொங்கியெழும் இளம்பெண்கள்: கொஞ்சம் இந்த வீடியோவை பாருங்க

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (16:56 IST)
கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் அடையாளம் தெரியாத நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


 
 
இந்நிலையில் சென்னையில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சுவாதி கொலை செய்யப்பட்ட பின்னர் யாரும் அவருக்கு உதவ முன்வராதது குறித்து விவாதித்து வருகின்றனர்.
 
சுவாதி படுகொலை செய்யப்பட்டு 2 மணி நேரம் ரயில் நடைபாதையிலே கிடந்துள்ளார். அவருக்கு உதவவோ, கொலை செய்தவனை பிடிக்கவோ, சுவாதியை மருத்துவமனையில் சேர்க்கவோ யாரும் முன்வரவில்லை.
 
அனைவருக்கும் ஒரு காட்சி பொருளாக மாறிய சுவாதியின் படுகொலை மிகவும் கண்டிக்கத்தக்கது என பலர் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இளம்பெண்களிடம் கருத்துக்கள் கேட்க்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த அவர்கள் ஆவேசமாக பொங்கி எழுந்து தங்கள் கோபத்தை கொட்டித்தீர்த்துள்ளனர். சமூகத்தின் மீதும், ஆண்கள் மீதும் உள்ள கோபத்தை அந்த பெண்கள் இந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளனர்.
 
மேலும் சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக இல்லை என பெரும்பாலானோர் கூறியுள்ளனர். ஒரு சிலர் மட்டுமே மற்ற நகரங்களை ஒப்பிடும்போது சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்றனர்.
 
அந்த வீடியோ கீழே:-
 
 

நன்றி: Red Pix
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments