Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் தீவிரம்: இன்று பிடிபடுவாரா?

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (09:31 IST)
நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுvin  விசாரணையில் அவரை கைது செய்ய தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 
இதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் எஸ்.வி.சேகர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால் அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும், மிக விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து கருத்து கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.வி.சேகர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments