Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் இவர் தானா? எதிர்த்து யாரும் போட்டி இல்லை.. அண்ணாமலை என்ன ஆவார்?

Mahendran
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (15:49 IST)
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்து வரும் வழியில், அவர் விரைவில் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என பாஜக அறிவித்தது. இதுவரை நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனு  தாக்கல் செய்துள்ளதாகவும், அவரை எதிர்த்து இன்னும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
எனவே, தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில், பாஜக தலைவராக தகுதி பெற 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் நயினார் பாஜகவில் சேர்ந்த நிலையில் , "அவர் எப்படி தலைவராக முடியும்?" என்ற கேள்வி எழுந்தது.
 
ஆனால் அதே நேரத்தில், "அண்ணாமலை என்ன பாஜகவில் 10 ஆண்டுகள் இருந்தாரா?" என்ற எதிர்வினையும் கிளம்பியுள்ளது. இதனால் பாஜகவில் விதிகள் மாற்றப்பட்டுவிட்டதாகவும், புதிய தலைவர் நயினார் நாகேந்திரன்தான் எனவும் அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், நாளை தமிழக பாஜக தலைவர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், நாளை மாலை புதிய தலைவர் பதவி ஏற்கிறார் என்றும் கூறப்படும் தகவல்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments