Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உமா மகேஷ்வரியை கொன்ற உண்மையான குற்றவாளி யார்? சீனியம்மாள் பரபரப்பு பேட்டி

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (09:55 IST)
உமா மகேஷ்வரியை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட சீனியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். 
 
முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என 3 பேரையும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதற்கிடையில் போலீஸாருக்கு சீனியம்மாள் என்னும் மதுரையை சேர்ந்த திமுக பிரமுகர் மீது சந்தேகித்தனர். அவரிடம் விசாரணையும் மேற்கொண்டர். பண பிரச்சனை காரணமாக சீனியம்மாள் உமா மகேஷ்வரியை கொலை செய்திருக்க கூடும் என விசாரணை மேற்கொண்டனர். 
ஆனால், சீனியம்மாள் செய்தியாளர்களுக்கு இந்த வழக்கு குறித்து பேட்டியளித்துள்ளார். சீனியம்மாள் கூறியதாவது, என்னை 2 முறை வந்து போலீசார் விசாரித்தார்கள். எனக்கு உடம்பு சரியில்லை. கூடல்நகரில் உள்ள என் மகள் வீட்டுக்குதான் நான் வந்திருக்கிறேன். 
 
வந்த இடத்தில் நான் எப்படி இப்படியெல்லாம் செய்ய முடியும்? என்று விசாரணையின் போது போலீஸாரிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பல்வேறு கோணங்களில் எல்லாரையும் விசாரிக்கிறோம். அந்த வகையில்தான் உங்களையும் விசாரிக்கிறோம் என சொன்னார்கள். 
ஆனால், போலீஸார் யாரோ ஒருவர் தூண்டிவிட்டுதான் என்னிடம் வந்து இந்த விசாரணையை நடத்துகிறார்கள். அப்படியே இருந்தாலும், உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர் அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியமே இல்லை. தேவையில்லாமல் என்னை விசாரித்து உண்மையான குற்றவாளியை தப்ப விட்டுவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.  
 
சீனியம்மாளின் பேட்டியின் மூலம் போலீஸாருக்கு கிடைத்து துப்பும் வீணாய் போய்யுள்ளது. காவல் துறையின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை காத்திருந்து தெரிந்துக்கொள்வோம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments