Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லம் தேடி கல்வி - நடிகர் சூர்யா அரசுக்காக விழிப்புணர்வு வீடியோ

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (12:07 IST)
இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். 

 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் இடையில் கல்வியை நிறுத்திய மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதற்கட்டமாக செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நம்ம மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. 
 
மாணவ, மாணவிகளுடைய கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக விளையாட்டு முறையில் எழுதவும், படிக்கவும், கல்வி ஆர்வலர்கள் சொல்லி தரப்போகிறார்கள். உரிய பாதுகாப்பு வழிமுறையோடு இல்லம் தேடிக்கல்வி என்ற திட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பயன்பெற பெற்றோரும், ஊர்மக்களும் ஊக்கவிப்போம் என்று நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments