சரியாக ஒரே வாரத்தில் தேன்மொழியை நிரந்தரமாக பிரிந்த சுரேந்தர்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (19:53 IST)
கடந்த வெள்ளியன்று சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தேன்மொழி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்த சுரேந்தர் என்பவர் வாக்குவாதம் செய்து, வாக்குவாதம் முற்றியதில் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு தேன்மொழியை தாக்கினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதுமட்டுமின்றி தேன்மொழியை தாக்கியவுடன் சுரேந்தர் அந்த வழியாக வந்த ரயிலின் முன் குதித்ததால் படுகாயம் அடைந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்
 
இந்த நிலையில் அரிவாள் காயம் அடைந்த தேன்மொழி மெல்ல மெல்ல குணாமாகி வரும் நிலையில் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சுரேந்தர் இன்று மாலை மரணம் அடைந்தார். ஒருதலையாக காதலித்தாலும் தனக்கு எப்படியும் தேன்மொழி கிடைப்பார் என்ற காதல் நம்பிக்கையுடன் இருந்த சுரேந்தர், சரியாக ஒரே வாரத்தில் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டார்
 
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் எழும்பூர் போலீசார், சுரேந்தரின் உடல் பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேன்மொழியை தாக்கிய குற்றவாளியே மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிடும் என கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments