பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் பதிவிட்ட விவகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:34 IST)
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்வி சேகர் சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்தை பதிவிட்ட விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 
 பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க எஸ்வி சேகர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
 
 கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற எஸ்வி சேகர் தரப்பு கோரிக்கையையும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
 
குடும்ப பிரச்சனைகள் தொடர்பான விவகாரமாக இருந்தால் காணொளி மூலமாக ஆஜராக அனுமதிக்கலாம் என்றும் இந்த வழக்கில் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments