Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனை விடுவிக்க முடியாது ; நீதிமன்றம் கை விரிப்பு

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (12:49 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை தற்போதைக்கு விடுவிக்க முடியாது என நீதிமன்றம் கை விரித்துவிட்டது.


 
இந்த வழக்கில் கடந்த 26 வருடங்களாக பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அந்நிலையில், அவருக்கு  சமீபத்தில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் தந்தையின் உடல்நலத்தை கனக்கில் கொண்டு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. அதன் பின் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்நிலையில், தான் பல வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும், தான் கொடுத்த வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யாததாலேயே தான் சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டு, தன்னை விடுதலை செய்யுமாறு அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வாதங்கள் முடிந்த பின் தீர்ப்பளித்த நீதிபதி, தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது என தீர்ப்பளித்தார். மேலும்,சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்கு அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments