Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (12:01 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மேல்முறையீடு வழக்குகள் அனைத்தும் ஜூலை நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 
 
இன்று நடைபெற்ற அமலாக்க துறையின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது என்றும் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. 
 
ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோது அவரை காவலில் எடுக்க முடியுமா என்ற கேள்வி கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடல்நிலை சரியில்லை என மருத்துவர் குழு சான்றளித்த பின் அவரை காவலில் எடுக்கப் போகிறீர்களா என்ற கேள்வியும் எழுப்பினர். 
 
ஆனால் அதே நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவைக் கொண்டு செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகலாம் என்று கூறி ஜூலை 4 ஆம் தேதிக்கு மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments