Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிரந்தர ஜாமீன்.. உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (13:58 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிரந்தர ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
ஆவினில்  வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஜாமீன் கேட்டு  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் வெளிமாநிலம் செல்ல அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. அதுமட்டுமின்றி அவருக்கு இடைக்கால ஜாமின் மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது.
 
இந்த நிலையில் இடைக்கால ஜாமீனில் இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் தற்போது நிரந்தர ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்ப்பித்துள்ளது.
 
முன்னதாக ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். 
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments