Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெயில் நிறுவனத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

கெயில் நிறுவனத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2016 (13:18 IST)
கெயில் நிறுவனத்தின் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


 
 
தமிழ்நாடு வழியாக கொச்சி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
 
இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக நிறைவேற்ற கோரி தமிழக அரசும், தேமுதிக-வும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி தாக்கூர் பெஞ்ச் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments