Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுக்குழு கூட்ட அனுமதி.. ஒயிட்வாஷ் செய்யப்படுவாரா ஓபிஎஸ்? – அதிமுகவில் பரபரப்பு!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (12:49 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதில் ஜனநாயக முறைப்படி கட்சி செயல்படுவதாகவும், கட்சி பெரும்பான்மையினரின் கருத்துகளை மீறி ஓபிஎஸ் செயல்படுவதாகவும் எடப்பாடி அணி குற்றம் சாட்டியது.

இன்று இந்த வழக்கு மீதான விசாரணையில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே நமது அம்மா நிறுவனர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், தற்போது பொதுசெயலாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அணி கூறி வருகிறது. இதனால் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்சின் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டு ஒயிட்வாஷ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments