Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Siva
ஞாயிறு, 18 மே 2025 (09:33 IST)
தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் மழைக்கான சூழ்நிலை காரணமாக, வெயிலின் கடும் தாக்கம் வருங்காலத்தில் குறையக்கூடும் என வானிலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா கூறியதாவது:
 
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. மே 18-ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களில் மிகுந்த மழை ஏற்படலாம்.
 
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  
 
நேற்று தமிழகமெங்கும் பெய்த மழையால் வெப்பநிலை 100 ஃபாரன்ஹீட்டை தாண்டவில்லை. தொடர்ந்து மழை நிலவுவதால், வெப்பம் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
 
நேற்று அதிகபட்சமாக திருவண்ணாமலையில் உள்ள செங்கத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், கடலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் 60 முதல் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் இனி வெப்பம் குறைய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் சிறிது நிம்மதியாக இருக்கலாம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments