Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு கோடை விடுமுறை: யாருக்கு, எத்தனை நாட்கள் ?

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (14:43 IST)
12 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 12 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
 
தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடையும் நிலையில் கோடை விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்தது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு தவிர அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. 
 
அதன்படி 1 - 9 வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு 30 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 23 நாட்கள் கோடை விடுமுறை. மேலும் 12 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 12 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆண்டுதோறும் பொதுத்தேர்வு முடிந்து ஒரு மாத காலம் விடுமுறை வழங்கப்படும் நிலையில் தற்போது வழங்கப்படாதது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments