Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பம்.. அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை.!

Siva
புதன், 3 ஏப்ரல் 2024 (16:38 IST)
சென்னையில் தற்போது 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை நெருங்கி வருவதாகவும் அடுத்த ஐந்து நாட்களில் இன்னும் அதிக வெப்பம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் உண்மையில் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
மேலும் ஏப்ரல் மாதம் முழுவதும் கடுமையான வெயில் இருக்கும் என்றும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் கொடுமை உச்சத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சென்னையில் தற்போது 97 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி வருவதாகவும் இது இன்னும் சில நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும் தமிழக முழுவதும் வறண்ட வெப்பநிலை தான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இருப்பினும் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை வேறுபாடு காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments