Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரட்டை இலை இடைத்தரகர் ஒரு மோசடி பேர்வழி - நம்பி ஏமாந்தாரா தினகரன்?

இரட்டை இலை இடைத்தரகர் ஒரு மோசடி பேர்வழி - நம்பி ஏமாந்தாரா தினகரன்?
, திங்கள், 17 ஏப்ரல் 2017 (12:52 IST)
தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை தினகரன் தரப்பிற்கு பெற்று தர லஞ்சம் பெற்று இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தர் என்பவர் ஒரு மோசடிப் பேர்வழி என்பது தெரியவந்துள்ளது.


 

 
டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலை 3 மணி அளவில், சுகேஷ் சந்தர் என்ற நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இரட்டை இலை சின்னத்தை தினகரன் தரப்பிற்கு பெற்றுத்தரும் இடைத்தரகராக அவர் செயல்பட்டதாகவும், அதற்காக ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டு ரூ.1.30 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரை கைது செய்த போது அவரிடத்தில் ரூ. 60 லட்சம் பணத்தை டெல்லி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
ஆனால், இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரன், இதில் தனக்கு தொடர்பில்லை எனவும், சுகேஷ் சந்தர் என்ற நபர் யாரென்றே தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியை சீர்குலைக்க சிலர் திட்டமிட்டு இப்படி செய்துள்ளனர் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் பற்றி விசாரணை செய்ய, ஏசிபி சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீசார் நாளை சென்னை வருகின்றனர். அவர்கள் தினகரனிடம் விசாரணை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், டெல்லி போலீசாரிடம் கைதான சுகேஷ் சந்தர் ஒரு மோசடிப் பேரவழி என்பது தெரிய வந்துள்ளது. சில வேலைகளை செய்து தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் அவர் மோசடி செய்துள்ளார். இவர் மீது அம்பத்தூர் கனரா  வங்கியில் ரூ.19 கோடி வாங்கி மோசடி, கர்நாடகாவில் ஆணுறை காண்ட்ராக்ட் வாங்கித்தருவதாக ரூ.65 லட்சம் மோசடி , அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பேரன் என மோசடி செய்தது, சொகுசு கார் மோசடி என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளது. அந்நிலையில், தனது காதலியான பிரபல நடிகை லீனா மரியா பாலுடன் 2010-ல் தலைமறைவான இவரை போலீசார் தேடி வந்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில்தான் டெல்லி போலீசார் இன்று காலை அவரை கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடிவி தினகரன் கைது?: டெல்லி காவல் துறை இன்று சென்னை வருவதாக தகவல்!