Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு தற்கொலை நிரந்தர தீர்வல்ல: விஷால் வேண்டுகோள்

Webdunia
திங்கள், 6 ஜூன் 2016 (08:47 IST)
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த நெல் திருவிழாவில் கலந்துக்கொண்ட விஷால் விவசாயிகளுக்கு தற்கொலை நிரந்தர தீர்வல்ல என்று வேண்டுகோள் விடுத்தார்.  


 

 
தஞ்சாவூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய போவதாக கூறிய விஷால் அதற்கு முதற்கட்ட வேலையை தொடங்கினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் நேற்று நெல் திருவிழா தொடங்கியது. அதில் கலந்து கொண்ட விஷால் நெல் செய்தி என்ற காலாண்டு இதழையும் வெளியிட்டார்.
 
விழாவில் பேசிய விஷால் கூறியதாவது:-
 
விவசாயிகளுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு பேச வேண்டுமானால் நானும் விவசாயியாக மாற வேண்டும். எனக்கு விதை விதைப்பது மிகவும் பிடித்த பணி, அதுதான் எனது நீண்ட நாள் விருப்பம். 
 
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என விவசாயத்தை கூறுகின்றனர். மருத்துவம், பொறியியல் போன்று விவசாயத்தையும் ஒரு பெரும் துறையாக மாற்றி சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
 
கடன் உள்ளிட எந்த பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக் கூடாது, அது நிரந்தர தீர்வும் அல்ல. இதுவே எனது வேண்டுகோள், என்றார்.     
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments