Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரைமுருகன் வளர்ப்பு அந்த மாதிரி!!! கடுப்பாகி கண்டபடி கத்திய சுதீஷ்!!

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (14:20 IST)
திமுகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் துரைமுருகன் அரசியல் நாகரிகமற்று நடந்துகொள்கிறார் எனவும் தேமுதிக துணை செயளாளர் சுதீஷ் கூறியுள்ளார்.
 
அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இழுபறியிலேயே நீடித்து வரும் நிலையில் கடைசியாக 4 தொகுதிகள் தான் கொடுக்கமுடியும் என அதிமுக கூறிவிட்டது. 
 
இந்நிலையில் நேற்று தேமுதிக சுதீஷ் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் அதிமுக கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர்.
 
இதுகுறித்து துரைமுருகன் பேசுகையில் ஸ்டாலின் தற்போது ஊரில் இல்லை எனவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என தேமுதிகவிடம் கூறிவிட்டதாக சொன்னார்.
 
இந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக பேச சென்றனர் என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார். 
 
முதலில் அதிமுக உடன் சில மனக்கசப்புகள் இருந்தபோது திமுக எங்களுக்கு அழைப்பு விடுத்தது. துரைமுருகனிடம் போனில் பேசியது உண்மைதான், ஆனால் நேற்று பேசவில்லை 10 நாட்களுக்கு முன்னர் பேசினேன். ஒரே ஊர்காரர் அதனால் பல விஷயங்கள் குறித்து பேசுவோம்.
 
அதுபோக துரைமுருகன் திமுக பற்றி நிறைய தன்னிடம் புலம்பியதாகவும், அதை பற்றி வெளியே சொன்னால் நன்றாக இருக்காது எனவும் கூறினார்.
 
கேப்டன் வளர்ப்பில், வழியில் வந்த நாங்கள் அரசியல் நாகரிகம் கருதி சில விஷயங்களை வெளிப்படையாக சொல்லவில்லை ஆனால் துரைமுருகனுக்கோ அந்த நாகரிகமெல்லாம் இல்லை அவரது வளர்ப்பு அந்த மாதிரி என காட்டமாக பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

அடுத்த கட்டுரையில்
Show comments