Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் தற்கொலையால் மனமுடைந்த பெற்றோரும் தற்கொலை - திடுக்கிடும் சம்பவம்

Webdunia
ஞாயிறு, 9 ஜூன் 2019 (14:47 IST)
பொன்னேரியை அடுத்துள்ள பெருமேடு கிராமத்தில் வசித்துவந்தவர் குமார் (46).  இவர் விவசாயி. இவரது மனைவி சுமதி (38). இந்த தம்பதியரின் மகள் தேவி (16) . கடந்த 6 மாதங்களுக்கு முன்பு +1 படித்த போது தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து அவரது பெற்றோர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர்.  இந்நிலையில் தாய் சுமதி தீடீரென்று நேற்று முந்தினம் தனது உடலில் தீவைத்துக்கொண்டார்.பின்னர் அவரது உறவினர்கள் சுமதியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பினர்.
 
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் 90 % அளவுக்கு காயம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.இதை உறவினர்கள் குமாரிடம் கூற முயன்றபோது, மருத்துவமனையில் அவரைக் காணவில்லை. 
 
இந்நிலையில் நேற்று கீழ் பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுமதி உயிரிழந்தார். அப்போது குமாரை தேடி வந்த உறவினர்கள் பெரும்பேடு ஏரிக்கரையில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார்,
 
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேறி போலீஸார் இந்த சுமதி - குமார் ஆகியோரின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments