Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா என்ன செய்கிறார் தெரியுமா? - வீடியோ பாருங்க....

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (14:30 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலிவுட் திரையுலகினர்களின் முகத்திரையை கிழித்து வந்த சுசித்ராவின் டுவிட்டர் பக்கம், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது. 


 

 
சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ஹேக்கர்களின் கைவரிசை இது என்று கூறப்பட்டது. மேலும், சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என கார்த்திக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  அதேபோல், தனது கணவரை பிரிய உள்ளதாக சுசித்ரா பேட்டியும் கொடுத்தார். சுசித்ராவின் கணவர் உள்பட யாருக்கும் சுசித்ரா எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை எனக் கூறப்பட்டது. மேலும், சுசித்ரா கடத்தப்பட்டதாக கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.   அதன் பின் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் ஏராளமான வீடியோக்கள் டிவிட்டரில் வலம் வந்தன. தற்போது அந்த விவகாரம் அடங்கியுள்ளது.
 
இந்நிலையில், சுசித்ராவின் கணவர் கார்த்திக் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் இருக்கிறேன். ஒரு புதிய காமெடி நிகழ்ச்சிக்கு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எதை பற்றி தெரியுமா எனக் கேள்வி கேட்டு விட்டு கேமராவை திருப்புகிறார். அங்கே சுசித்ரா இருக்கிறார். நீங்களே கெஸ் பண்ணுங்க எனக் கூறி கார்த்திக் ஒரு வில்லன் சிரிப்பை சிரிக்கிறார்.
 
இதன் மூலம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுச்சி லீக்ஸ் விவகாரத்தை காமெடி நிகழ்ச்சியாக கார்த்திக் தயாரிக்கப் போகிறார் என்பதும்,  சுசித்ராவும், அவரும் தற்போதைக்கு சந்தோஷமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments