Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் அலுவலகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு - சுசித்ரா பேட்டி

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (11:11 IST)
நடிகர் தனுஷ் அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு பின்னரே, தன்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர் என்பது தனக்கு தெரிய வந்தது என பின்னணிப் பாடகி சுசித்ரா விளக்கமளித்துள்ளார்.


 

 
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மயி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில், சஞ்சிதா ரெட்டி மட்டும் அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சுசித்ரா “இரண்டு நாள்களுக்கு முன், பாடல் ஒளிப்பதிவு முடிந்து இரவு வீட்டிற்கு வந்து தூங்கினேன். காலையில் தனுஷ் ஆபிஸிலிருந்து  போன் செய்து, என்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ மீண்டும் ஹேக் செய்திருப்பதாக கூறினார்கள். அப்போதுதான் படங்களை பார்த்தேன். அந்தப் படங்களை அழிக்க முயற்சி செய்தேன். 
 
ஆனால், தொடர்ந்து படங்கள் போடப்பட்டு வந்ததால் என் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சிலர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்ட என்னுடைய ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்துகிறார்கள். யாருக்கு யார் மீது பொறாமை, யாரை பழிவாங்க இதை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை” என அவர் கூறியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments