Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி இலங்கை சென்றால்...: சுப்பிரமணியன் சுவாமி டுவீட்!

ரஜினி இலங்கை சென்றால்...: சுப்பிரமணியன் சுவாமி டுவீட்!

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (11:24 IST)
ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் அறக்கட்டளை சார்பாக நடக்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகளை வழங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.


 
 
ரஜினியின் இலங்கை பயணத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். லைக்கா நிறுவனத்தின், ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
 
அங்குள்ள தமிழர்களுக்கு இந்த வீடுகளை வழங்க லைக்கா நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அதனை நடிகர் ரஜினிகாந்த் மூலம் வழங்க உள்ளதாக லைக்கா அறிவித்துள்ளது. இதற்காக ஏப்ரல் 9, 10 தேதிகளில் ரஜினி இலங்கை செல்லவுள்ளார், இது தான் அவரது முதல் இலங்கை பயணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
ஆனால் ரஜினியின் இந்த பயணத்துக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் இலங்கையிலும் கூட பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. ரஜினி அரசியலில் சிக்க வேண்டாம். அவர் இலங்கை செல்லக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் ரஜினியின் இலங்கை பயணத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் எதிர்ப்புகளை மீறி ரஜினிகாந்த் இலங்கை சென்றால், அவரை நிச்சயம் பாராட்டலாம் என பதிவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments