Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாரை விடமாட்டோம்; மிரட்டல் விட்ட யுவராஜ் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (14:54 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை நாங்கள் விடமாட்டோம் என மிரட்டல் விடுத்த யுவராஜ் மீது திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் புகார் அளித்துள்ளார்.


 
 
சென்னை காவல்துறை ஆணையரிடம் யுவராஜுக்கு எதிராக சுப.வீரபாண்டியன் அளித்த புகாரில் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஆடியோ வெளியிட்ட யுவராஜ் திமுக தலைவர் கருணாநிதி மீதும், தொல்.திருமாவளவன் மீதும், தன் மீதும் எச்சரிக்கை விடும் வகையில் பேசி கொலை மிரட்டலையும் விடுத்திருந்தார்.
 
சமூக அமைதியைச் சீர்குலைக்கக் கூடிய இத்தகைய செயலுக்காக சட்டப்படி யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
யுவராஜ் வெளியிட்ட அந்த ஆடியோவில் ராம்குமாருக்கு ஆதரவான கருத்து தெரிவிக்கும் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
 
மேலும் ராம்குமாரை நீதிமன்றம் விடுவித்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்றும் ராம்குமாருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியிருந்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் திமுகவினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்று கூட தெரியாதா? அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments