Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வலையில் சிக்கும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் !

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (08:43 IST)
தஞ்சையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் நேற்று மேலும் 1087 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு  கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,64,450 பேராக அதிகரித்துள்ளது. மேலும், 610 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,40,671ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் பீதி அடைந்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் தெரிவித்து வருகின்றனர். எனவே, புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
ஆனால், தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் இயங்கி வருவதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப  பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனிடையே, தஞ்சையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments