Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு ஆபாசப்படம் காட்டி சீரழித்த சிறுவர்கள்! – கோவையில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (10:04 IST)
கோயம்புத்தூரில் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி தந்த ஸ்மார்ட்போன் மூலம் சிறுமிக்கு ஆபாசப்படம் காட்டி வன்கொடுமை செய்த சிறுவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரில் தாயை இழந்த சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் அத்தையோடு மாடி வீடு ஒன்றில் வாடகைக்கு வாழ்ந்து வந்துள்ளார். தந்தையும், அத்தையும் வேலைக்கு சென்று விடும் நேரத்தில் கீழே உள்ள வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று டி.வி பார்ப்பதை சிறுமி வழக்கமாக கொண்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் தனது 10வது படிக்கும் மகனுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்காக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதில் ஆபாசப்படங்களை பார்த்து வந்த அந்த சிறுவன், டிவி பார்க்க வந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் நண்பர்கள் இருவரையும் அழைத்து வந்து அவர்களையும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய செய்துள்ளார். இந்நிலையில் சில நாட்களின் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

அப்போது இந்த விவரங்களை சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு மாணவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோயம்புத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்