Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: மாணவி வளர்மதி கைது!

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (13:02 IST)
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்ததாக சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் பாய்ந்தது என்பதும் பின்னர் நீதிமன்றம் அவர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலம் வரையிலான 8 வழிச் சாலைக்காக  தங்களின் விவசாய நிலங்களை அழிப்பதை தடுக்ககோரி சேலம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் ஆச்சாங்குட்டப்பட்டி என்ற பகுதியில் 8 வழி சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி வளர்மதி சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து போராடிய மக்களையும் போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
 
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்த வட்டாசியரை எதிர்த்து வளர்மதி உள்பட அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதாகவும், இதனையடுத்து வளர்மதியை வலுக்கட்டாயமாக போலீஸ் இழுத்து சென்று கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதே காரணத்திற்காகத்தான் நேற்று சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments