Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலெக்டரின் கார் மோதி மாணவி படுகாயம் – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (13:44 IST)
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவின் கார் மோதியதில் பெரம்பலூரைச் சேர்ந்த மாணவி படுகாயமடைந்துள்ளார்.

பெரம்பலூர், துறைமங்கலம் அருகே நடுத்தெருவைச் சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி எட் படித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் நேற்று தங்கள் வயலுக்கு சென்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிந்தார். அப்போது எதிரே சர்வீஸ் ரோட்டில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மாணவி கீர்த்திகாவுக்கு தலை, கை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது.

தற்போது அவர் திருச்சி காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கபப்ட்டுள்ளார். மாணவியின் மோதிய கார்  அரியலூர் ஆட்சியர் ரத்னாவின் கார் என்பது தெரியவந்துள்ளது. விபத்தின் போது அந்த காரில் ஆட்சியரின் தாய் மற்றும் தந்தையினர் திருச்சியிலிருந்து அரியலூர் சென்றுள்ளனர். இதையடுத்து ஓட்டுனர் மேல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments