Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பா அம்மா கஷ்டப்படுகிறார்கள்.. ஆனால் நான் அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றவில்லை – சென்னை மாணவி தற்கொலை !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (13:14 IST)
சென்னை திருவொற்றியூரில் கல்லூரி பருவத்  தேர்வை ஒழுங்காக எழுதாத மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் சாமுவேலின் மகள் கீர்த்தனா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று தேர்வெழுத சென்ற இவர் வீட்டுக்கு வரும் சோகமாக இருந்துள்ளார். தனது அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

அவரின் அறைக்கதவை உடைத்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார் கீர்த்தனா. அறையில் அவர் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘ எனது தாய் தந்தையர் என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். ஆனால் நான் சரியாகப் பருவத் தேர்வை எழுதவில்லை. என் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை.’ எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

அடுத்த கட்டுரையில்
Show comments