Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை திருமணம் செய்வதாக அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (18:27 IST)
காதலியை திருமணம் செய்வதாக அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் மற்றும் நண்பர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (27). இவர் அப்பகுதியில் ஆட்டோ மற்றும் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வேனில் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அடிக்கடி பயணம் செய்துள்ளார்.
 
இதனால், அந்த மாணவிக்கும் சுரேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதற்கிடையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக சுரேஷ் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி மாணவியும் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
 
பிறகு இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றித் திரிந்துள்ளனர். அதன் பின்னர் நாங்கள் இருவரும் நாகர்கோவில் சென்றபோது, அங்கு இரவில் தங்க இடமில்லாததால், சுரேஷின் நண்பர் தினேஷ் மற்றும் கோபால் ஆகியோர் வடசேரி பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து கொடுத்தனர்.
 
இதனையடுத்து இருவரும் அன்றிரவு ஒன்றாக தங்கியுள்ளனர். மறுநாள் காலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறி மாணவியின் நகைகளை வாங்கியுள்ளார். அதனை அடகு வைத்து தாலி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகிறேன் என்று கூறி வெளியேச் சென்றார்.
 
ஆனால், அந்த லாட்ஜுக்கு அவரது நண்பர்கள் தினேஷ், கோபால் ஆகியோரும் வந்தனர். அவர்களுடன் என்னை தனியாக இருத்தி விட்டு சுரேஷ் வெளியேச் சென்று விட்டார். சுரேஷ் வெளியேச் சென்ற பின்பு அவரது நண்பர்கள் என்னை கத்தி முனையில் மிரட்டி கற்பழித்தனர்.
 
இதற்கிடையே சுரேசின் இன்னொரு நண்பரும், லாட்ஜில் பக்கத்து அறையில் தங்கி இருந்தவருமான ஞானபிரவினும் மாணவியை பலாத்காரம் செய்தார். பிறகுதான் மாணவிக்கு, காதலனே தன்னை நண்பர்களுக்கு விருந்தாக்கியது தெரிய வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த நான் சுரேஷ் மற்றும் அவர்களின் நண்பர்களுடன் தகராறு செய்துள்ளார்.
 
இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி முதல் இம்மாணவி திடீரென மாயமானதை அடுத்து, அவர் காணாமல் போய்விட்டதாக மாணவியின் பெற்றோர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
 
இதனையடுத்து காவல் துறையினர் பல இடங்களில் மாணவியை தேடி உள்ளனர். ஆனால், மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில் இளம்பெண் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இளம் பெண்ணும், சில வாலிபர்களும் தகராறு செய்வதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து வந்த போதுதான் மாயமான மாணவி இவர்தான் என்று.
 
பிறகு மாணவி அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் சுரேஷ், அவரது நண்பர்கள் தினேஷ், கோபால் மற்றும் ஞானபிரவின் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் மாணவியின் காதலன் சுரேஷ், கோபால், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு .. அரசுக்கு உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

மம்தா பானர்ஜியை திடீரென சந்தித்த பாஜக எம்பி.. கட்சி மாறுகிறாரா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு.. எந்த இணையத்தில் பார்க்கலாம்?

குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு பரிந்துரை.!!

அடுத்த கட்டுரையில்
Show comments