நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை முயற்சி...

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (22:22 IST)
திருவள்ளூரில்  நீட் தேர்வு எழுதிய மாணவி நீட் தேர்வு முடிவு பயத்தால் தற்கொலை செய்து முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 17 ஆம் தேதி மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட  பெரியகுப்பம் எம்.ஜி.ஆர் நகரில் பெற்றோருடன் வசித்து வரும் மாணவி ஒருவர் தேர்வு எழுதி இருந்தார்.

இந்த நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்த மாணவி  வீட்டில் இருந்த வார்னிஷை குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாணவி உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  மருத்துவமனையில் மாணவியின் தாய் கதறி அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு அனுமதி இல்லை.. தவெகவின் மாற்று ஏற்பாடு இதுதான்..

திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments