டாஸ்மாக் மது பாட்டிலுக்குள் மூடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்.. ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி..!

Siva
புதன், 29 மே 2024 (12:10 IST)
வேலூரில் ஆட்டோ டிரைவர் வாங்கிய மது பாட்டிலுக்குள் மூடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் உள்ளே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மது பாட்டிலுக்குள் உள்ளே சில பொருட்கள் இருப்பதாக அவ்வப்போது சர்ச்சை வெளியாகும் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் வேலூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் டாஸ்மாக்கில் வாங்கிய மது பாட்டிலுக்குள் மூடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ய உள்ளனர்.

மேலும் அவர் கூடுதலாக 5 ரூபாய் செலுத்தி மது பாட்டிலை வாங்கியதாகவும், அப்படி வாங்கிய மதுபாட்டிலில் ஸ்டிக்கர் இருந்ததால் அருந்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் வேதனையுடன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மது பாட்டில் மூடியில் உள்ள ஸ்டிக்கர் உள்ளே இருந்த  தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments