Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 9 பேர் பலி

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (16:23 IST)
தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலருக்கு மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க.
 
http://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-ministers-denied-to-comment-sterlite-118052200044_1.html
 
 
 
இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட வன்முறை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், 'போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கூடுதலாக காவல்துறையினர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். 
 
இதுவரை வெளிவந்த தகவலின்படி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் ஜெயராமன், கிளாட்ஸன், கந்தையா, வினிஸ்டா, தமிழரசன், சண்முகம், மற்றும் மணிராஜ் ஆகியோர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையும் படிங்க....

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/why-rajini-not-speaks-about-tuticorin-issue-118052200046_1.html

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments