ஆசையில் தொடங்கி கொலையில் முடிந்த கள்ளக்காதல்....

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (15:28 IST)
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் பகுதியில் கள்ளத்தொடர்பு காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் பிரேம்குமார். இவருக்கும் கருப்பாயூரணி பகுதியில் வசித்து வந்த சூர்யா என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
 
சூர்யாவுக்கு ஏற்பகனவே கலியாணம் ஆகி குடும்பம் உள்ள நிலையில் இந்த கள்ளக் காதல் விவகாரத்தை அறிந்த சூர்யாவின் கணவர் பிரகாஷ் தனது சகோதரருடன் சேர்ந்து திட்டம் தீட்டி பிரேம் குமாரை வெட்டிக் கொலை செய்ததாக தெரிகிறது.
 
இந்நிலையில்  பிரேம் குமாரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
பிரேம் குமாரை கொலை செய்த குற்றவாளிகளான சூர்யாவின் கணவர் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்! தவெக விஜய்யின் இரங்கல் பதிவு!

விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு? பிரச்சாரத்திற்கு முழுவதும் தடை? - என்ன நடக்கும்?

திமுகவின் அஜாக்கிரதையே இவ்வளவு உயிர் பலிகளுக்கு காரணம்!? - அண்ணாமலை கண்டனம்!

கரூர் துயர சம்பவம்! உடனே கரூர் கிளம்பிய மு.க.ஸ்டாலின்! பிரதமர் மோடி இரங்கல்!

விஜய் பிரச்சாரத்தில் துயரம்! கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலி! - கண்ணீரில் கரூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments