Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரியில் ஸ்டாலின்– 4 நாட்கள் பிரச்சாரம் !

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (07:44 IST)
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

நாங்குநேரி ,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் களமிறங்குகின்றன. காங்கிரஸ் சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக நீண்ட இழபறிக்குப் பிறகு ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் ’ கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் பெற்ற வெற்றியைக் காட்டிலும் ரூபி மனோகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவருக்காக வருகிற 9, 10 ஆகிய தேதிகளிலும் - அதேபோல் தொடர்ந்து 15, 16 ஆகிய தேதிகளிலும் நாங்குநேரியில் நான் பிரச்சாரம் மேற்கொள்ள் இருக்கிறேன். அதிமுகவின் கரெப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் ஆட்சி மற்றும் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சர்வாதிகாரம் - சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு இவற்றையெல்லாம் எடுத்துச்சொல்லி பிரச்சாரம் மேற்கொள்வோம்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அமெரிக்க சுகாதார மைய இயக்குனர் ஆகிறார் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கலா?

சென்னை அருகே 'ஃபெங்கல்' புயல் கரையை கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு

மாணவரின் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments