ஸ்டாலின் vs உதயநிதி ஸ்டாலின்: திருவாரூர் திமுக வேட்பாளர் யார்?

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (14:00 IST)
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அவரது தொகுதியான திருவாரூர் காலியான தொகுதி என அற்விக்கபப்ட்டு இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. இந்த இடைத்தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என திமுக பல திட்டங்களை வகுத்து வருகிரது. அந்த வகையில் வெற்றி பெற தகுந்த வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் தெளிவாய் உள்ளார். 
 
தற்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், உதயிநிதி ஸ்டாலின் பெயரும் விருப்பமனு தாக்கலில் இடம்பெற்றுள்ளது.
 
இடைத்தேர்தல் தேதி அறிவித்தது முதலே ஸ்டாலின் இந்த தொகுதியில் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகிவருகிறது. அப்படி ஸ்டாலின் இந்த தொகுதியில் நின்றால் அவருக்கு வெற்றி நிச்சயம் என்றும் கூறப்படுகிறது. 
 
பொருத்திருந்து பார்ப்போம் திமுக வேட்பாளர் யார் என்பதை....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments