Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி சட்டசபைக்கு வருவதை விரும்பாத ஸ்டாலின்

Webdunia
சனி, 18 ஜூன் 2016 (13:56 IST)
தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி வீல் சேரில் வந்து வசதியாக அவை விவாதங்களில் பங்கேற்க இருக்கை ஒதுக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்து வருகிறது. இந்த விவகாரம் தலைப்பு செய்தியாக வரும் அளவிற்கு முக்கியத்துவமானதாக மாற்றி வருகின்றன இரு கட்சிகளும்.


 
 
இந்நிலையில் அதிமுக ஒதுக்கிய இருக்கை கருணாநிதி வீல் சேரில் வந்து அமர வசதியாக இல்லை என ஸ்டாலின் நேற்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கருணாநிதி சட்டசபைக்கு வருவதை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 
கடந்த 26 ஆம் தேதி சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மு.கருணாநிதியை தவிர மற்ற அனைத்து திமுக உறுப்பினர்களுக்கும் எந்தெந்த வரிசையில் இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
 
அந்த பட்டியலில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் இல்லவே இல்லை. கருணாநிதிக்கு எந்த இடம், எவ்வாறு ஒதுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிடவே இல்லை. அதாவது கருணாநிதி சட்டமன்றத்திற்கு வருவதை ஸ்டாலின் விரும்பவே இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. என ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments