Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய் டாக்டர் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:39 IST)
10 ரூபாய் டாக்டர் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல்!
சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த டாக்டர் கோபால் என்பவர் இன்று காலமானார் என்பதும் அவர் அந்த பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு பத்து ரூபாய்க்கு சிகிச்சை அளித்தார் என்பதையும் பார்த்தோம்
 
பத்து ரூபாய் டாக்டர் என்று பெயர் பெற்று அந்த பகுதியில் போற்றப்படும் நபராக இருந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சையின் பலன் இன்றி இன்று அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இதனையடுத்து அந்த அந்த பகுதியில் உள்ள அனைவரும் டாக்டர் கோபால் மறைவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பத்து ரூபாய் டாக்டர் கோபால் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த சமூக சேவை மருத்துவர் திரு. கோபால் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எவருக்கும் எளிதில் கிடைத்திடாத '10 ரூபாய் டாக்டர்' என்ற அடைமொழியை மருத்துவத்தை சேவையாகச் செய்து பெற்றவர்! பல்லாண்டுகள் பேசப்படும் அவரது புகழ்! ஆழ்ந்த அஞ்சலி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

தாய்லாந்து - கம்போடியா போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம்: டிரம்ப்

வீடு புகுந்து இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments